🔴 பஞ்சகவ்ய விளக்கு


🔴 நமது முன்னோர்கள் மஹாலஷ்மியின் அம்சமான பசுவிடமிருந்து பெறக்கூடிய சாணம்..கோமியம்..பால்..

தயிர்..நெய் போன்ற ஐந்துவிதமான புனித பொருளை ஒன்றாக இணைத்து பஞ்சகவ்ய விளக்கை உருவாக்கி அதில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டனர்.

புனிதமான பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும் போது நமது கோரிக்கைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உடனடியாக கலந்து இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று  தரும் ஆற்றல் மிக்கதாகும்.

பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும் இடத்தில் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும்.  அனைத்து தோஷங்களும் விலகும். கண்திருஷ்டி மறையும். பிரார்த்தனை அனைத்தும்   நிறைவேறும், அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பஞ்சகவ்ய விளக்கை இல்லத்தில் ஏற்றும் போது அக்னிஹோத்ரம் யாகம் செய்த பலனை   நீங்கள் பெறலாம்.

🔴 இல்லத்தில் அல்லது தொழில் செய்யும் இடத்திலோ தினமும் மாலை இந்த பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாம் அல்லது கோவிலுக்கு சென்று நவக்கிரகங்களுக்கு இந்த விளக்கை ஏற்றி வரலாம். ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கூடவே ஆஸ்ரமத்தில் தயார் செய்யப்பட்ட பஞ்ச தீப எண்ணெய் அதாவது சுத்தமான பசு நெய், நல்லெண்ண, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய்,

விளக்கெண்ணெய் இந்த ஐந்து வகையான எண்ணை யுடன் பெருந்தும்பை  என்று கூறப்படும். குபேர மூலிகை கொண்டு கலந்து செய்யும் பஞ்ச தீப எண்ணையில் தீபம் ஏற்றும்போது. மஹாலக்ஷ்மி அருள் பரிபூரணமாக கிடைக்கும்.. Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us